தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை சைவ சமயத்தின் மிக முக்கியத் தமிழ் மறை நூல்களாகும். பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியவை) என்றும், எட்டாம் திருமுறை (மாணிக்கவாசகர் பாடியவை ) திருவாசகம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிவபெருமான் மீது பாடப்பட்ட பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.
தேவாரம் என்பது 'தே' (இறைவன்) + 'ஆரம்' (மாலை) - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்று பொருள் படும். இதன் சிறப்பு: பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களாக பாடப்பட்டவை.
சிவனின் புகழையும், பெருமையும், சிவபக்தியின் மேன்மையையும் இந்த தேவார திருவாசக தொகுப்பில் இருந்து அறிந்து கொள்ளலாம் . தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதற்கு பயிற்சி அளிப்பதுடன் , தேவாரம் திருவாசக வரிகளில் கூறப்பட்டிருக்கும் பாடல் வரிகளுக்கு விளக்கம் இந்த வகுப்பில் கூறப்படும்.